பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு!

0
214
Super Deal by Famous Cement Company! The consolation of the smiling queen who invested!
Super Deal by Famous Cement Company! The consolation of the smiling queen who invested!

பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு!

90 களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். இவருக்கு புன்னகை அரசி என்று ஒரு பட்டப்பெயர் கூட உள்ளது. அந்த அளவிற்கு பிரபலம் ஆனவர். இவர் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சாக்லேட் பாய்  பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் பூர்வீகம் ஆந்திரா ஆகும். பல படங்களில் நடித்த இவர் 2009 ம் ஆண்டு  பிரசன்னாவுடன் நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் அவர்கள்  காதலிக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு 2012 ம் வருடம் அவர்கள் திருமண வாழ்வில் இணைந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது பல துணை கதாபாத்திரங்களை திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளுக்கும் தலைமை பொறுப்பு ஏற்று வகித்து வருகிறார். இந்நிலையில் ஆந்திராவில் உள்ள பிரபல நிறுவனமான எம்.எஸ். கௌரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமெண்ட் கம்பெனியில் இருந்து சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி என்ற இரு நபர்களுக்கு  பிரசன்னாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு அவர்கள் எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும், 25 லட்சம் செலுத்தும்போது மாதத்திற்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பிய சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். கடந்த வருடம் மே மாதத்திலேயே இந்த பணிகள் முடிவடைந்துள்ளன.

25 லட்சத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும், ஒரு லட்ச ரூபாயை ரொக்கமாகவும் அவர்கள் கையில் கொடுத்துள்ளார்கள். ஆனால் தற்போது வரை எந்த தொகையும் அவர்களது கணக்கிற்கு வரவில்லை என்று தற்போது கானத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த அவர்கள் சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி மீது பணமோசடி புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து கேட்டால் மிரட்டல் விடுவதாகவும் கூறுகின்றனர்.

இது போல் மிகப்பலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். பலரிடம் இப்படித்தான் பணம் சம்பாதிக்கலாம் என்றும் இரட்டிப்பு செய்து தரப்படும் என்றும் பலரை ஏமாற்றி வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பிரபலங்கள் இவர்களது பிரச்சனை சீக்கிரம் தீர்ந்துவிடும்.

ஆனால் அன்றாட வாழ்விற்கே கஷ்டப்படும் பலரும் இந்த மாறி மற்றவர்களை நம்பி ஏமாந்து போய்விடுகின்றனர். இதற்கு அரசு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும். பணக்காரர்கள் பணம் என்றாலும் சம்பாதித்த பணம் தானே. மேலும் இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்ட திரையுலகினர் இடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகேரள மாடல் அழகிகள் மரணித்த விபத்தில் துப்பு துலக்கிய போலீசார்! கைது செய்யப்பட்ட ஓட்டல் அதிபர்! திடுக்கிடும் தகவல்கள்!
Next articleதற்போது பெய்து வரும் கனமழையால் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு!