முகத்தில் உருவாகும் பருக்கள் உடைந்தால் அவை நாளடைவில் கரும் புள்ளிகளாக மாறி முக அழகை கெடுத்துவிடும்.இவ்வாறு முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை மறையச் செய்ய சூப்பர் பேஸ் ஸ்க்ரப்பர் ஒன்று தயார் செய்து தினந்தோறும் பயன்படுத்தி பலனை பெறுங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:
1)வெள்ளை சர்க்கரை – 100 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
4)தேயிலை மர எண்ணெய் – மூன்று சொட்டு
செய்முறை விளக்கம்:
1.முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த அளவில் பேஸ் ஸ்க்ரப்பர் செய்தல் கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் வரை பயன்படுத்த முடியும்.
2.முதலில் ஒரு அகலமான கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் 100 கிராம் அளவிற்கு வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3.அடுத்து 200 மில்லி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி ஸ்பூன் கொண்டு நன்றாக கலந்துவிட வேண்டும்.
3.சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
4அடுத்ததாக 3 சொட்டு தேயிலை மர எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.இவ்வாறு செய்தால் மெரூன் நிறத்தில் ஒரு க்ரீம் கிடைக்கும்.இதை ஈரம் இல்லாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ள வேண்டும்.
5.இந்த ஸ்க்ரப்பரை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் குளிந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு முகத்தை துடைத்த பிறகு தயாரித்து வைத்துள்ள ஸ்க்ரப்பரை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.கரும் புள்ளிகள் அதிகமாக உள்ள பகுதியில் இதை அப்ளை செய்ய வேண்டும்.
6.அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும்.இதேபோல் வாழைப்பழத் தோலை முகத்தில் ஸ்க்ரப் செய்து வந்தால் கரும்புள்ளிகள் முழுமையாக மறைந்துவிடும்.