வெள்ளை முடியை கரு கருன்னு மாற்றும் சூப்பர் ஹேர் டை!! ஒருமுறை பயன்படுத்தினாலே ரிசல்ட் கிடைக்கும்!!

Photo of author

By Divya

 

வயதான பிறகு தலை முடி நரைப்பது இயல்பான ஒன்று தான்.இது அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வே.ஆனால் இன்று இளம் தலைமுறையினர் பலருக்கு நரைமுடி பிரச்சனை பெரும் தொல்லையாக மாறிவருகிறது.

 

இந்த நரையை மறைக்க கெமிக்கல் ஹேர் டையை பயன்படுத்துவதால் முடி உதிர்தல்,தலை அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.தொடர்ந்து கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் கேன்சர் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

வெள்ளை முடியை கருமையாக்க இயற்கை முறையில் ஹேர் டை தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

 

இயற்கை ஹேர் டை

 

தேவையான பொருட்கள்:

 

1)விளக்கெண்ணெய்

2)பாதாம் எண்ணெய்

3)வெந்தயப் பொடி

 

செய்முறை:

 

ஒரு கிண்ணத்தில் 20 மில்லி விளக்கெண்ணெய் 20 மில்லி பாதாம் எண்ணெய் ஊற்றி கலக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை கடாயில் போட்டு வறுக்கவும்.

 

அதன் பிறகு இந்த வெந்தயத்தை ஆறவிட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கலவையில் கலந்து பேஸ்டாக்கவும்.

 

இதை 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஊறவிட்டு தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவவும்.பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி தலை முடிகளை அலசி சுத்தம் செய்யவும்.இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் அடர் கருமையாக மாறும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)தேங்காய் எண்ணெய்

2)எலுமிச்சை சாறு

3)மஞ்சள் பொடி

 

செய்முறை:

 

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கருகும் வரை சூடாக்கவும்.மஞ்சள் தூள் கருகியதும் அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆற விடவும்.பிறகு கருகிய மஞ்சளை ஒரு கிண்ணத்தில் கொட்டி பவுடராக்கவும்.

 

அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை மஞ்சள் பொடியில் கலந்து பேஸ்டாக்கவும்.பிறகு இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடவும்.அதன் பின்னர் குளிர்ந்த நீர் பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி அனைத்தும் அடர் கருமையாகும்.