இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!

0
110

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!

மத்திய அரசு வேலையில் பணி செய்ய ஆர்வமுள்ளவர்கள்,புதிய மற்றும் அனுபவம் கொண்ட பணியாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) நிறுவனத்தில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு,புதுச்சேரி,கர்நாடகா,கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 490 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் டெக்னீஷியன்,டிரேட் அப்ரெண்டிஸ்/கணக்குகள் எக்ஸிகியூட்டிவ்/கிராஜுவேட் அப்ரெண்டிஸ் (தொழில்நுட்பம் & தொழில்நுட்பம் அல்லாதது) உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்கள் மற்றும் துறைகளில் உள்ள பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தகுதியான விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

காலிப்பணியிடங்கள்: 490

கல்வி தகுதி:

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டெக்னீசியன், டிரேட் அப்ரண்டிஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் / கிராஜுவேட் அப்ரெண்டிஸ் (தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத) பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் ITIயில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.6,000/- முதல் ரூ.10,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அதனை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 10-09-2023

மேலும் இப்பணிகளுக்கான கூடுதல் விவரம் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய https://iocl.com/admin/img/Apprenticeships/Files/4e36b7f0aead4da7a6979f32d23d5252.pdf பகுதியை பார்வையிடவும்.

Previous articleகாதலிக்காக நடிகர் ஷாருக்கானிடம் இலவச டிக்கெட் கேட்ட காதலன்!!! நடிகர் ஷாருக்கான் சொன்ன பதிலை பாருங்க!!!
Next articleதமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் செப்டம்பர் மாதம் !!