ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலை!! தபால் முறையில் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

Photo of author

By Divya

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலை!! தபால் முறையில் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

மத்திய அரசின் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (Rail Vikas Nigam Limited – RVNL) நிறுவனத்தில் காலியாக உள்ள Manager பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக வரவேற்க படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (Rail Vikas Nigam Limited – RVNL)

பதவி: Manager

காலியிடங்கள்: Manager பணிக்கென மொத்தம் ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: கொல்கத்தா,மேற்கு வங்கம்

கல்வி தகுதி: Manager பதவிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறைகளில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது அதிகபட்சம் 45 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- முதல் 1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Manager பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://rvnl.org/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப் பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முகவரி:

The Dispatch Section,Ground Floor,August Kranti Bhawan Bhikaji Cama Place,R.k. Puram ,New Delhi -110066.

கடைசி நாள்: 13-09-2023