ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! இனி மாதம் இரண்டு முறை பொருட்கள் பெறலாம்?
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த பொங்கல் பண்டிகையன்று பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹோலி பண்டிகை வர இருப்பதினால் பிப்ரவரி மாதம் ரேஷன் கடைகளில் இரண்டு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மார்ச் 8 ஆம் தேதி ஹோலி பண்டிகை வர இருப்பதினால் அதற்கு முன்னதாக இலவச ரேஷன் பொருட்களை இரண்டு முறை பெற்றுக் கொள்ளலாம். கடந்த 20ஆம் தேதி முதல் உத்தரபிரதேச மாநிலத்தில் இலவச கோதுமை மற்றும் அரிசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இலவச அரிசி மற்றும் கோதுமை விநியோகம் வருகிற 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் இந்த கால அவகாசத்திற்குள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமையை இரண்டு முறை பெற்றுக் கொள்ளலாம் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.