ஜூன் 28 முதல் அனைத்து பேருந்துகள் இயக்கம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Photo of author

By Kowsalya

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஜூன் 28-ஆம் தேதி முதல், வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு செய்துள்ளது.

இந்நிலையில் 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் அரியலூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கிருஷ்ணகிரி மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சிவகங்கை தேனி தென்காசி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி விழுப்புரம் வேலூர் மற்றும் விருதுநகர் இந்த 27 மாவட்டங் களுக்கு இடையே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தளர்வுகள் உடன் கூறிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. வெகுவாக பரவல் குறைந்ததை அடுத்து ஏழாம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததும், மறுபடியும் மாவட்டங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப் பட்டன. மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனி ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், தளர்வுகள் குறித்தும், மருத்துவ நிபுணர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டது.இந்நிலையில் ஜூன் 28-ஆம் தேதி முடிய உள்ள ஊரடங்கில் வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் .மேலும் ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 100 சதவீத ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜவுளி கடைகள் நகைக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சி கடற்கரையில் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு அனுமதி இல்லை. உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத நபர்களுடன் செயல்பட அனுமதி.

மேலும் தொற்று குறையாத கோவை திருப்பூர் ஈரோடு சேலம் தஞ்சாவூர் நாகப்பட்டினம் போன்ற 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்ல இப்பதிவு இல்லாமல் பயணிக்கலாம். திருமண நிகழ்வுகளில் 5 பேர் கலந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மத வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதி. அதேபோல் அர்ச்சனை திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

வகை மூன்றில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஜவுளி கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி. வணிக வளாகங்கள் கடைகள் திறக்க அனுமதி.

வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து அனுமதி. வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங் களுக்கு இடையே நகரப் பேருந்துகள் 50 சதவீதம் பயணிகளுடன் பயணிக்க அனுமதி.

வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கு தேநீர் கடைகளை திறக்க அனுமதி. அழகு நிலையங்கள் சலூன் கடைகள் திறக்க அனுமதி போன்ற தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சில தளர்வுகள் தந்து, வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களில் கிடையே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.