மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் ஆன்லைன் தேர்வு வெளிநாடுகளுக்கு சுற்றுலா!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழக அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ள்ளது. அந்த அறிவிப்பில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடவாரியாக தேர்வுகளை நடத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தயாரிக்கும் கேள்விகள் அனைத்தும் எமிஸ் இணையப்பக்கத்தில் பதிவிட வேண்டும். அதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு அருகில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தில் வைத்து ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அதனையடுத்து அந்த தேர்வுகளில் மாநில அளவில் வெற்றி பெறும் அனைத்து மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி சுற்றுலா வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு மாணவர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.