சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் ஆஃபர்!! சந்தோசமா வாங்க 18 ஆயிரம் வாங்கிட்டு போங்க!!
கொரோனா வைரஸ் பரவல் 2 ஆம் அலை அதிகாரத்து வரும் நிலையில் நாடு விட்டு நாடு பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல காரணமாக பல நாடுகளிலும் சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை மூடியிருந்தன. இதனால் வெளியூருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. பிறகு தளர்வுகால் ஏற்பட்டு ஒவ்வொன்றாக திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் முடக்கம் ஏற்ப்பட்டதால் ஒரு சிலர் மட்டுமே சுற்றுலாத் தலங்களுக்கு செல்கின்றனர். இதனால் சுற்றுலாத்தலங்கள் கலையிழந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஐரோப்பா மால்டா அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அவர்கனின் நாட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் 3 நாட்கள் தங்கினால் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூபாய் 18 ஆயிராம் வழங்கப்படும் என்ற சூப்பர் ஆஃபர் ஒன்றினை வெளியிடுள்ளது.
இந்த அறிவிப்பு பெரும்பாலானோரை கவர்ந்துள்ளது. வரும் கோடையில் மெடிடரேனியன் தீவுகள் என சொல்லப்படும் இந்த மால்டாவின் பொருளாதாரத்தில் 27 சதவீதத்திற்கு மேலாக சுற்றுலா மூலம் கிடைக்கிறது. மேலும் 2019ஆம் ஆண்டு 2.7 மில்லியன் வெளிநாட்டினர் சுற்றுலா வந்திருந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 80 சதவீதத்திற்கு மேலாக சரிவை சந்தித்துள்ளது. 5 நட்சத்திர ஹோட்டலில் அறைகளை ஒதுக்கினால் 200 யூரோக்களும், 4 நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை ஒதுக்கினால் 150 யூரோக்களும், 3 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கினால் 100 யூரோக்களும் வழங்கப்படும் என்று அறிவித்து மக்களை கவர்ந்து வருகின்றது ஐரோப்பா அரசு.