வாட்சாப் வழங்கும் சூப்பர் ஆப்பர்! இதை செய்தால் உங்கள் அக்கவுண்டில் பணம்!

Photo of author

By Rupa

வாட்சாப் வழங்கும் சூப்பர் ஆப்பர்! இதை செய்தால் உங்கள் அக்கவுண்டில் பணம்!

வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் அனைவரும் தங்கள் மனநிலை பல இணையத்தள வழிகளில் கூறி வருகின்றனர்.அந்தவகையில் இருப்பது ஒன்று தான் வாட்சாப்.இதுபோன்று பல இணையத்தள ஆப்கள் உள்ளது.அவற்றில் பேஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்றவை சமூக ஊடகங்கள் ஆகும்.அவைகளில் தங்கள் கருத்துகளை மக்கள் முன்னிலையில் கூறப்படும் ஓர் தளமாக அமைகிறது.ஆனால் வாட்சாப் முற்றிலும் இதற்கு மாறானது.இந்த ஆப் ஆனது நமக்கு தெரிந்த நபருடன் பேசுவதற்கு ஓர் இடமாக செயல்படுகிறது.குறிப்பாக தொழில் முனைவோருக்கு அதிகளவு இந்த வாட்சாப் உபயோகம் ஆகிறது.

முதலில் வாட்சாப் ஆனது,ஸ்டேட்டஸில் புகைப்படம் வைக்கும் படி மட்டுமே தனது முதல் அப்டேட்டை வெளியிட்டது.நாளடைவில் வீடியோ போன்றவற்றை வைக்கும் அப்டேட்டை வெளியிட்டது.அதனையடுத்து வாட்சாப் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்ற அப்டேட் ஒன்றை வெளியிட்டது.தற்போது அதிகப்படியான பயனார்களை பெற்றுள்ளது.சில மாதம் முன் வாட்சாப் ஆனது பெரிய அதிர்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் அவர்கள் கூறியிருந்தாவது,தற்போது வாட்சாப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்க இருப்பதால் புதிய அக்ரி என்ற கோட்பாட்டை கூறியது.

அந்த கோட்பாடானது வாட்சாபில் ஷேர் செய்யப்படும் அனைத்து புகைப்படங்கள் மற்றும் பேசும் அனைத்து செயல்களையும் பேஸ்புக் நிறுவனம் சேமித்து வைத்து கொள்வதாக கூறினர்.தற்பொழுது இதுமாரியான கோட்பாடுக்கு சம்மதம் தெரிவித்தல் மட்டுமே மேற்கொண்டு வாட்சாப் உபயோக்கிக்க முடியும் என்று கூறினர்.இவ்வாறு இந்த அக்ரிக்கு நாம் சம்மதம் தெரிவித்தால்,நமது வங்கி கணக்குகள் முதல் அனைத்தும் பதிவு செய்யப்படும்.

அது வேறு வழிகளில் தவறாக பயன்படுத்தப்படலாம்,அதனால் மக்கள் அனைவரும் அதனை எதிர்த்தனர்.இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது அந்த வழக்கானது நிலுவையில் உள்ளது.இதற்கிடையே வாட்சாப் பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டால் அதிகளவு கேஷ்பேக் தருவதாக கூறியுள்ளனர்.ஏனென்றால் இந்த பண பரிமாற்றம் அப்டேடானது பல மாதம் முன் வந்தாலும் பெருமாலான மக்கள் பயன்படுத்தவில்லை.தற்போது இதுபோல ஆப்பர்கள் கொடுக்கப்பட்டால் மக்கள் உபயோக்கிக்க வாய்ப்புகள் உள்ளதால் இவ்வாறான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.