சூப்பர் சிங்கர் குழந்தைகளுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய பிரபல பாடகி!! வைரலாகும் புகைப்படம்!!

Photo of author

By CineDesk

சூப்பர் சிங்கர் குழந்தைகளுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய பிரபல பாடகி!! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமா திரைப்பட பின்னணி பாடகியாக இருப்பவர் கே எஸ் சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜட்ஜஸ்ல் ஒருவாறாக இருக்கிறார். மேலும் இவரின் பாடலை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, ஆசாமியா, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். மேலும் இவர் 6 முறை இந்திய தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறுமுறை தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியர்கள் இடையே இசைக்குயில் எனவும் சின்னக்குயில் சித்ரா எனவும் பிரபலமாக அழைக்கப்படுகிறார். ஜனவரி 2021 இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இவர் தனக்கு முழுநேர பின்னணி பாடகியாகும் எண்ணம் முன்பே இருக்கவில்லை என்று நினைத்திருந்தார். பள்ளி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த பொழுது கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து யேசுதாஸ் உடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும் தரங்கிணி பதிப்புகளிலும் சித்ராவிற்கு பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புது குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.

திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடி பெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து விருப்பமில்லாமல் சென்னைக்கு வந்தார். எதிர்பாராத விதமாக சித்ராவுக்கு பல பாடல் வாய்ப்புகள் தேடி வந்து. தற்பொழுது இவர் உலகமெங்கும் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர்களுடன் இணைந்து நேற்று நடந்த தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.