இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படமானது ஜனவரி 10 ஆம் தேதியான நாளை வெளியாக உள்ள நிலையில், இதற்கான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பிரமோஷன் விழா ஒன்றில் பேட்டி அழைத்த சங்கரிடம் யாருடைய பயோபிக் எடுக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு இயக்குனர் சங்கர் அவர்கள், நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளது என்றும் அதனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக எடுக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கேம் சேஞ்சர் திரைப்படத்தை தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படத்தின் வேலைகளை விரைந்து முடிக்க உள்ளதாகவும் அதனை தொடர்ந்து வேள்பாரி திரைப்படத்தில் கவனம் செலுத்த இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சங்கர் அவர்களின் இந்தியன் 2 திரைப்படம் ஆனது ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் ராம்சரன் நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.