நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நேற்று படத்தின் 50 வது நாளை கொண்டாட்டத்தின் போது படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார் சூப்பர்ஸ்டார்.

 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படத்தை டாக்டர் இயக்குனர் நெல்சன் இயக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

 

முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளது.

 

படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

எற்கனவே பாண்டிராஜ் லோகேஷ் கனகராஜ் கே எஸ் ரவிக்குமார் பால்கி ஆகியோரிடம் சூப்பர் ஸ்டார் கதைகள் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment