தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது!

0
317
Super update announced by Tamilnadu Electricity Board! No more blackouts!
Super update announced by Tamilnadu Electricity Board! No more blackouts!

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது!

கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் கால அவகாசம் வழங்கி மின்வாரியத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் பொது பயன்பாடுகாண மின் இணைப்புகள் எத்தனை என்பது குறித்து வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் படைக்க ஏதுவாக இருக்கவும் தேர்வு முடியும் வரை முழு நேரம் மின்தடை செய்யப்பட மாட்டாது என தமிழ்நாடு மின்சார வாரிய அறிவித்துள்ளது.

மாணவர்களின் தேர்வை  கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை மின்தடை தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பியிருந்தது அந்த கடிதத்தின் அடிப்படையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் முழு மின்தடை இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Previous articleஅரசு தேர்வுத் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக போட வேண்டும்!
Next articleஇங்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!