சூப்பர் போங்க ! WhatsApp-இன் புதிய அசத்தலான Update!

Photo of author

By Kowsalya

சூப்பர் போங்க ! WhatsApp-இன் புதிய அசத்தலான Update!

வாட்ஸ்அப் செயலி தனது வாடிக்கையாளர்களுக்காக தனி Chat-க்கு தனி Wallpaper வைக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் அதிக பயன்பாட்டாளர்களை கொண்ட வாட்ஸ் அப் செயலி ஒவ்வொரு முறையும் தனது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு அம்சங்களை வெளியிடுகிறது.

புதிய ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள், அட்வான்ஸ் சர்ஜ் ஆப்ஷன், ஸ்டோரேஜ் பயன்பாட்டில் மேம்பாடு, புதிய ஐகான்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது.

இதற்கிடையே மிகவும் அட்டகாசமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பயன்பாட்டாளர்கள் தங்களது ஒவ்வொரு தனிப்பட்ட Chat- க்கும் தனியாக வால்பேப்பர்களை(Wallpaper) வைத்துக் கொள்ள முடியும்.

கேலரியில் இருக்கும் புகைப்படங்களை தனித்தனியாக அனுப்பி கொள்ள முடியும்.

அதுமட்டுமில்லாமல் Dark Mode மற்றும் Light Mode ஒவ்வொரு தனிப்பட்ட Chat -க்கும் வைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.