மன அழுத்தத்தை குறைக்கும் சூப்பர்ஃப்ரூட்!

Photo of author

By Pavithra

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த கொய்யாவில்,விட்டமின் மற்றும் மினரல் அதிகமாகவும் கலோரியும் கொழுப்பு சக்தியும் மிகக் குறைவாகவும் உள்ளதால்
இந்த பழத்தை சூப்பர்ஃப்ரூட் என்று அழைக்கின்றனர்.இந்தப் பழத்தில் 150க்கும் மேலான கொய்யா வகைகள் உலகம் முழுவதும் கிடைக்கின்றது.நம் தமிழகத்தில் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஆயக்குடி பகுதியில் இந்த கொய்யா பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.
ஆயக்குடியில் விளைவிக்கும் பழங்கள் அதிகளவில் பழனிக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த பகுதி பழங்கள் மிகவும் சுவையானதாக இருக்கின்றது என்றும் பலரின் கருத்தாகும்.

ஒரு கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கு விட்டமின் சி உள்ளது.
ஒரு கொய்யாப் பழத்தில் அன்னாசி பழத்தை விட இரண்டு மடங்கு மினரலும் புரதச் சத்துக்களும் உள்ளன.

ஒரு கொய்யா பழத்தின் தக்காளியை விட இரண்டு மடங்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கொய்யா பழத்தின் பலன்களை இதில் காண்போம்!

1.நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க இந்த கொய்யாப்பழம் பெரிதும் உதவுகின்றது.

2.புற்றுநோய் செல்களை அறிக்கை இந்த கொய்யாப்பழம் பயன்படுகின்றது.அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த இந்த கொய்யா பழங்கள் பயன்படுகின்றன.

3.எந்த பழமும் சாப்பிடாத சர்க்கரை வியாதி உடையவர்கள் இந்த பழத்தை சாப்பிட மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவர்.ஏனெனில் இந்த பழத்திற்கு உடலில் திடீரென்று சர்க்கரையை உயர்த்தி கின்ற தன்மை கிடையாது.

5.மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகின்றது.

6.கண் பார்வை அதிகரிக்க
இந்த கொய்யாப்பழம் பயன்படுகின்றது.

7.மனஅழுத்தம் நிறைந்த வேலை வேலை செய்பவர்களுக்கு மூளைக்கு புத்துணர்ச்சி தந்து தசை பிடிப்புகளை நீக்கி மன அழுத்தத்தை குறைக்கும்.

8. இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த பழம் அருமருந்தாக பயன்படுகின்றது.

9.தோல் சுருக்கத்தை நீக்க இந்த பழம் பெரிதும் உதவுகின்றது.

10.இந்தப் பழம் காய்ச்சல் உள்ளவர்களுக்கு காய்ச்சலைக் குறைக்க நல்ல மருந்தாக பயன்படுகின்றது.