உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க !!

0
143
#image_title
உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க
உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பான செயல் ஒன்றை செய்யவுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இந்தியன் 2 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தியன் 2 திரைப்படம் கடந்த 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகும்.
இந்தியன் 2 திரைப்படத்தின். படப்பிடிப்பு தொடங்கி நன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா, தைவான் ஆகிய இடங்களில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்னும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் தொடங்கினார். இதையடுத்து இந்தியன் 2 திரைப்டத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியன் 2 திரைப்படம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நவம்பர் 3ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று(நவம்பர்2) கிலிம்ப்ஸ் வீடியோ பற்றிய முக்கியமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியன் 2 திரைப்படத்தில் கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிடும் நபர் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியன் 2 திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிடவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு லைகா புரொடக்சன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி நாளை(நவம்பர்3) மாலை 5.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிடவுள்ளார். அதே போல தெலுங்கில் இந்தியன் 2 கிலிம்ப்ஸ் வீடியோவை பிரபல இயக்குநர் ராஜமௌலி அவர்கள் அதே நேரத்தில் வெளியிடவுள்ளார்.
Previous articleமேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!!
Next articleBreaking: தமிழக அரசியலில் அடுத்த திருப்பு முனை.. எங்க கட்சிக்கே வந்துருங்க!!அண்ணாமலையின் அவசர நடவடிக்கை!!