நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி

Photo of author

By Anand

நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி

Anand

Updated on:

Rajini was insulted for not having hair on his head!! Do you know who insulted?

நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திங்கள் இரவு நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரவு திடீரென அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு 73 வயதாகும் நிலையில் திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்தடுத்த மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் உரிய அனுமதி கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இதற்கான மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.