சென்னை அயனாவரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தேசிய அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் என் கிணற்றை காணவில்லை என்பதை போல இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
யார் செய்தார்கள் என்று தெரியவில்லை உயர் அதிகாரிகள் எல்லோரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்வதை ஏற்க இயலாது தவறு செய்தவர்கள் மேல் மட்டும்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் 2,3 விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசும்போது வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று பேசினார்.
இதயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையில் அதிகாரிகளையும் பார்க்க துவங்குவது சரி இல்லை புதிய ஆதாரங்களை எதையும் இந்த ஆணையம் தெரிவிக்கவில்லை வெறும் காரணங்களை மட்டும் தான் தெரிவித்திருக்கிறார்கள் அதிகாரி தெரிவித்ததையும் பிரித்து கூறியிருக்கிறார்கள் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் எந்த விதமான புதிய தகவலும் இல்லை.
ஆணையத்தின் அறிக்கையில் உண்மையை கண்டறியும் தன்மை இல்லை. எங்களை பொறுத்தவரையில் யாராவது கையில் கல்லை எடுத்து எரிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான் பொது சொத்துக்களை சேதாரம் செய்தார்கள் என்றால் சமூக விரோதி தான். திருமாவளவன், சீமான், கனிமொழி, ஸ்டாலின் அனைவரும் கருத்து தெரிவிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.
ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தொடர்பாக ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது. ரஜினிகாந்த் பேசிய கருத்து அவருடைய பார்வையில் சரியானதுதான். அருணா ஜெகதீசனின் ஆணைய அறிக்கையில் ரஜினிகாந்தின் கருத்தை பற்றி தெரிவித்ததை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. அவருடைய கருத்தை பற்றி ஆணைய அறிக்கையில் பேசியிருப்பது ஏற்புடையதல்ல என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசியதை விட ரஜினி பேசியது ஒன்றும் தவறில்லை எடப்பாடி பழனிச்சாமி எந்த சூழ்நிலையில் தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று தெரிவித்து இருப்பார் என்று யோசிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார் அண்ணாமலை.