சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிம்பிள் லுக்!! ஷாக்கான தொகுப்பாளர்!

Photo of author

By Gayathri

தமிழ் திரையுலக “சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படும் ‘ரஜினிகாந்த்’ தற்போது ‘கூலி’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் நடித்திருந்த ‘அண்ணாத்த’, ‘தர்பார்’ ஆகிய இரு படங்களும் தோல்வியுற்றது. இதனால் ரசிகர்கள் பலரும் அப்படத்தின் தோல்வி குறித்து ட்ரோல் செய்து வந்தனர். இத்தோல்வியை ஈடு செய்யும் அளவில் ‘ஜெயிலர்’ படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

உலக அளவில் ‘700 கோடி’ வசூலைத் தாண்டியது. இதைத் தொடர்ந்து இவர், ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ என்ற படம் நடித்திருப்பார். அப்பிடத்தில் வரும் ‘மனசிலாயோ’ பாடல் மிகப்பெரிய ஃபேமஸ் ஆனது. எனினும், அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அப்படத்திலும் அவர் எனர்ஜிடிக்காக நடித்திருப்பார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வயசு ஆகிறதா, ஆகலையா என பல கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர்.

கூலி:

‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து ‘லோகேஷ் கனகராஜ்’ இயக்கத்தில் “கூலி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவரோடு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ‘நாகர்ஜுனா’, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்களும் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஏதும் இல்லை.

ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு உள்ள ரசிகர்கள் போல் அவரது எளிமையான தோற்றத்துக்கும் ரசிகர்கள் உண்டு. அவர் சினிமா துறையில் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களையும், அவரை கரம் பிடித்து உயர்த்தி விட்டவர்களை மறவாதிருப்பவதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய அந்த குணமே, அவருடைய சிம்பிள்சிட்டிக்கு காரணம் என்கின்றனர் ரசிகர்கள்.

ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சிம்ப்ளிசிட்டி குறித்து கேட்டபோது அவர், “ஏங்க நான் வருவதோ பிஎம்டபுள்யூ கார், தங்கியிருப்பதோ போயஸ் கார்டனில், உணவு உண்ணுவதோ 5ஸ்டார்,7 ஸ்டார் ஹோட்டல்களில் அவ்வாறு இருக்க, நான் எப்படி சிம்பிளாக இருக்கிறேன்” என்று சொல்லுகிறீர்கள் என்றார். நான் போட்டிருக்கும் உடை வைத்தா, “உடையிலும் சிம்ப்ளிசிட்டி இல்லை” என்றார். இதனைக் கேட்ட தொகுப்பாளர் ஷாக் ஆனார். இவ்வளவு ஓப்பனாக பேச சூப்பர் ஸ்டார் ஒருவராலே முடியும் என்று ரசிகர்கள் அவ்வீடியோவை ட்ரண்டாக்கி வருகின்றனர்.