இவர்களின் துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… தேர்வுத்துறை அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் துணைத் தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கும், 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நவ. 3 மற்றும் நவ. 4ம் தேதி அன்று நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு செல்லும் தேவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.