BJP: காஷ்மீர் பகுதியில் உள்ள பகல்ஹாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஒட்டுமொத்த நாடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா அவர்களுக்கு செல்லும் சிந்து நதிநீரை தடுத்துள்ளது. இப்படி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்ததால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளவர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி திருமா உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சீமான் இது ரீதியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நம்மை தாக்கியவர்களின் முகாம்களை அடித்து அழிப்பதை விட்டுவிட்டு அப்பாவி மக்களை பாதிக்கும் வகையில் தண்ணீரின்றி துன்புறுத்துவதா? என கேட்டிருந்தார். இதனையெல்லாம் வைத்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவர்களெல்லாம் பச்ச திரேச துரோகிகள் என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பகல்ஹாமில் நடத்திய தாக்குதலால் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து நமக்கு ஆதரவாளித்துள்ளது. ஏன் காஷ்மீர் முஸ்லிம்கள், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தவறு என்று சீமான் மற்றும் திருவாவளவன் கூறுவது மிகப்பெரிய தேச துரோகம். இவ்வாறு அவர்கள் கூறுவது இவர்களை தேச துரோகிகள் என நினைக்க வைக்கிறது என கூறியுள்ளார். திருமா மற்றும் சீமானை தேச துரோகிகள் என கூறியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.