தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடிகர் சூர்யா ,நீட் தேர்வு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் . இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் எதிர்த்தும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா காலத்தில் கல்வியை பாதியில் கைவிட்ட மாணவர்களுக்காக சூரியா, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் மாணவர்களோடு துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.
https://twitter.com/Suriya_offl/status/1305404921462759426?s=19
ஒருவர் படித்தால் வீடு மாறும் ,ஒவ்வொருவரும் படித்தால் நாடே மாறும் என்று கூறிய சூர்யா, பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் ,கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.
பொதுமக்களாகிய நாம் நினைத்தால் மாற்றலாம் என்று அந்த வீடியோவில் சூரியா பதிவிட்டுள்ளார்.