குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான 200க்கும் மேற்பட்ட பொது நல வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

கடந்த 2019 ஆம் வருடம் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட் நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற மதத்தினர் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறி இருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் இந்த சட்ட திருத்தம்.

இந்தச் சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் முதன் முதலாக போராட்டம் கிளம்பியது. இதன் பிறகு ஒட்டுமொத்த நாட்டிலும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆகவே போராட்டங்கள் நடத்தப்பட்டனர். இதில் பல இடங்களில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சட்டத்திற்கு எதிராக 200க்கும் மேற்பட்ட பொது நலன் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டனர்.

ஆனால் நோய் தொற்று பரவியதன் காரணமாக, இந்த சட்டத்திற்கான எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்பட்டனர். உச்ச நீதிமன்றத்திலும் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. சமீபத்தில் இந்த வழக்கை தலைமை நீதிபதி யு யு லலித் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Leave a Comment