சுறா பட நடிகர் கார் மீது திடீர் கல்வீச்சு! அட்சத்தில் பகுதி மக்கள்!!

Photo of author

By Rupa

சுறா பட நடிகர் கார் மீது திடீர் கல்வீச்சு! அட்சத்தில் பகுதி மக்கள்!!

அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களை சிலரும் உரிமை எடுத்துகொண்டு சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.அதேபோல் முக்கூடல் பகுதியில் உள்ள பெயர்பெற்ற முத்துமாரியாம்மன் திருக்கோவிலிலும் இதை போன்ற சம்பவம் நடந்துள்ளது.அதனை கண்ட நடிகர் மீசை ராஜந்திரன் தனது சொந்த ஊரில் இவ்வாறு நடப்பதை கண்டு மனம் வருந்தி மதுரை உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் பல்வேறு தீர்ப்புகள் கூறப்பட்டநிலையிலும் அதனை மதிக்காமல் சிலர் தொடர்ந்து கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தனது சொந்த ஊரான முக்கூடலுக்கு சென்ற நடிகர் மீசை ராஜேந்திரன் குடும்பத்துடன் முத்துமாரியமான் கோவிலுக்கு சென்றர்.அப்போது அங்கு நடக்கும் கோவில் திருப்பணிகளை பார்த்து இந்த கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும் அரசின் உத்தரவு இல்லாமல் கோவில் திருப்பணியை செய்ய கூடாது என்றும் கூறினார் அப்போது அங்கு இருந்த சில பக்தர்கள் கோவம் அடைந்தனர்.         சினிமா நடிகர்களை கண்டால் செல்பி எடுக்க ஆர்வம் காட்டும் நபர்களுக்கு மத்தியில் அவரை கல் வீசி தாக முயன்றது வியக்கத்தக்கது.அங்கு உள்ள அனைவரும் மீசை ராஜேந்திரனிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் முக்கூடல் பகுதயில் உள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து விட்டு தனது காரில் குடும்பத்தினருடன்  வீடு திரும்பி கொண்டிருந்தார்.அவரது கார் செல்லும் வழியில்  சிலர் நின்று வழி மறைத்தனர்.பின்பு அவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு மீசை ராஜேந்திரன் கார் கண்ணாடியை கல் வீசி உடைத்தனர்.அப்போது அவர் நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்நிலையதில் புகார் அளித்து பிறகு தான் நான் வந்தேன் என்று கூறினார். என்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.