54 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சூரசம்ஹாரம்!!

0
44
#image_title

திருச்செந்தூர் தமிழ் கடவுள் முருகரது புகழ்பெற்ற  கோவில்களில் ஒன்றாகும்.            இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூச விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் பண்டிகை காலங்களில் நடைபெறுவது வழக்கம்.ஆனால் முருகனுக்கே உரிய சிறப்பு வாய்ந்த சூரசம்ஹார நிகழ்ச்சியானது  கடந்த 54 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

தற்போது  இக்கோவிலுக்கு புதிதாக  அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனைக்  கூட்டம்  அறங்காவலர் குழுத்தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கோவிலில் வருடா வருடம் நடைபெறும் சிறப்பு பூசைகள் தைப்பூசம் நிகழ்வுகள் போன்றவை செவ்வனே நடந்து வருகிறது.ஆனால் சூரசம்ஹார  நிகழ்ச்சி மட்டும் கடந்த 1969 ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்றது  பிறகு நடப்பாண்டு 2023 ஆண்டு வரை நடைபெறாமல் உள்ளது.

புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சி மறுபடி நடத்தப்படவுள்ளது இதற்காக தேவைப்படும் கடவுளர் சிலைகள் செப்பணிடும் பணிக்காக கோவில் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன.

54 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சி பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் தனசேகர்,ஜெயக்குமார் ,குணசேகர்,சங்கீதா,ஸ்ரீகன்யா மற்றும் அறங்காவலர் துறை தலைவரான செந்தாமரைக்கண்ணன் அவர்கள் பங்கேற்றனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் சூரசம்ஹார் நிகழ்ச்சி ஆனது வரும் நவம்பர் மாதம் நடைபெறும் எனவும்  குறிப்பிட்டனர்.

author avatar
CineDesk