கண்டிப்பாக இவர் தான் அடுத்த பிரதமர்!! 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு!!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை தக்க வைப்பார் என்று பிரபல செய்தி சேனலான டைம்ஸ் நவ்-இடிஜி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.கருத்துக்கணிப்பின் படி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் பெருமையை மோடி பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் – இடிஜி நடத்திய கருத்துக்கணிப்பு விவரம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 வரையிலான இடங்களை கைப்பற்றும் என்றும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியான ‘இந்தியா’ 160 முதல் 190 வரையிலான இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 353 இடங்களில் வென்றது.ஆனால் அதைக்காட்டிலும் பாஜக கூட்டணி இந்த முறை தேர்தலில் 27 முதல் 30 வரையிலான குறைவான இடங்களைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்த ‘இந்தியா’ கூட்டணி 160 முதல் 190 வரையிலான இடங்களில் வெற்றி பெரும்.இந்த கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது.இந்த கூட்டணிக்கு தென் மாநிலங்களான தமிழ்நாடு,கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கின்றது.ஆனால் மற்ற மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்டவை இண்டியா கூட்டணிக்கு சவாலாக இருக்கும்.இந்நிலையில் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரை நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தாது.
மேலும் இந்தி மொழி பேசும் குஜராத்,மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்,பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 80% வெற்றி வாய்ப்பு இருக்கின்றது.ஆளும் பாஜக அரசின் ஆட்சியில் நடைபெற்ற மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பற்றி எதிர்க்கட்சிகள் பிரசாரத்தில் பேசினாலும் அவை தேர்தலில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தாது.அதே வேளை வளர்ச்சி பாதையில் இந்தியா,10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசி வருவது நாடாளுமன்ற தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக்தில் இந்தியா கூட்டணி 30 முதல் 34 இடங்களிலும் என்டிஏ கூட்டணி 4 முதல் 8 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கின்றது.அதே வேளையில் கர்நாடகாவில் இந்தியா கூட்டணிக்கு 8 முதல் 10 இடங்களிலும் என்டிஏ கூட்டணிக்கு 18 முதல் 20 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு இருக்கின்றது.
மகாராஷ்டிரா மற்றும் பிகாரில் என்டிஏ கூட்டணிக்கு இந்தியா கூட்டணி பெரும் சவாலாக இருக்கும் என்றாலும் பிகார் மாநிலத்தில் என்டிஏ அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கின்றது என்று கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.