மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றால் காலமானார்!

0
133

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி (வயது 65) கடந்த 11ம் தேதி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்தார் சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆவார்.

இவரின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபுதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு!
Next articleபிக் பாஸ்4ல் சாண்டிக்கு பதில் இவரா?புது போட்டியாளர்களை களமிறக்க உள்ள பிக் பாஸ்!