நடிகரிலிருந்து அமைச்சராக மாறியவர்!! நடிப்பதற்கு மோடியால் போடப்பட்ட தடை!!

Photo of author

By Gayathri

தமிழ் சினிமா துறையில் தீனா, ஐ மற்றும் தமிழரசன் போன்ற திரைப்படங்களில் நடித்த மலையாள நடிகர் தான் சுரேஷ் கோபி.

இவர் சமீப காலமாக தன்னுடைய 250 வது படத்திற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிகராக மட்டுமின்றி பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு பின் வெற்றியும் அடைந்தார்.

அதன்பின்னர், மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பொழுதும் இவர் ஏற்கனவே ஒரு சில மலையாள படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் தனக்கு நடிப்பு தான் முக்கியம் அமைச்சர் பதவி வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். ஆனால் மத்திய அரசு அவரை இனி எந்த படங்களிலும் நடிக்க கூடாது என கூறியுள்ளது.

படங்களில் நடிக்க கூடாது என்று கூறியதுடன் மட்டுமல்லாமல், அமைச்சர் பதவியில் கவனம் செலுத்துமாறும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரான அமித் ஷவும் நடிகர் சுரேஷ் கோபிக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய 250 ஆவது திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் தன்னுடைய படப்பிடிப்பை தொடங்குவதாக இருந்த நிலையில், இவரால் இனி படங்களில் நடிக்க முடியாது என்ற தகவல்களும் பரவி வருகிறது.