சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ளது.
இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி சிறப்பான பங்களிப்பை செய்தவர் சுரேஷ் ரெய்னா. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு அணியில் இடம் கிடைக்காததால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை அணிக்காக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரை மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கும் சென்னை அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணியால் தக்கவைத்துக் கொள்ளப்படவில்லை.
இதையடுத்து நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் இந்தியில் வர்ணனையாளராக பணியாற்றினார். மேலும் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டதாகவும் அறிவித்தார். இந்நிலையில் இப்போது லண்டனில் தோனியை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா சி எஸ் கே அணியில் விளையாட வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் ஆருடம் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழகம். சமீபத்தில் நடந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ரெய்னாவுக்கு டாக்டர் பட்டத்தை அளித்தார்.