சச்சின் டெண்டுல்கர் ட்ராவிட் உள்ளிட்டோர் செய்யாத ஒரு செயலை கூட டோனி தனக்கு செய்தது தொடர்பாக சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரின் நட்பு தொடர்பாக தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட்டிலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, இருவருமே மிக நெருக்கமாக இருந்தவர்கள்.இவர்களுடைய நட்பு தொடர்பாக பாராட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட அனேக விமர்சனங்களும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியில் நடுவரிசையில் சுரேஷ் ரெய்னா தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் எல்லோருடைய மனதையும் கொள்ளை கொண்டார். அதிலும் மிக முக்கியமான ஆட்டங்களில் முக்கிய வீரர்கள் மிகவேகமாக ஆட்டத்தை இழந்த சமயத்தில் எல்லாம் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் ஒன்றிணைந்து பலமுறை இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறார்கள். டோனியின் மனநிலை என்ன என்பதை சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படும் ஒரு வீரர் சுரேஷ் ரெய்னா என்றே சொல்லலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக மட்டுமல்லாமல் சுழற்பந்து வீச்சாளராக முன் பலமுறை சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு உதவி புரிந்திருக்கிறார். இருந்தாலும் சில வருடங்களாக இந்திய அணியில் சரியான வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருந்ததன் காரணமாக, சென்றவருடம் தோனி தன்னுடைய உயிரை அறிவித்தவுடன் ஒரு சில நிமிடங்களில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டார். இருந்தாலும் ஐபிஎல் தொடரில் ஒன்றாக இணைந்து தற்போது வரையில் விளையாடி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இப்படியான சூழலில் மகேந்திர சிங் தோனி உடன் தன்னுடைய மறக்க இயலாத ஒரு சில சம்பவங்களை சுரேஷ்ரெய்னா பகிர்ந்து இருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது. அதில் சென்ற 2007ஆம் வருடம் தனக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சமயத்தில் தோனி அவரிடம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வயது உங்களுக்கு கிடையாது சற்று பொறுமையாக ஓய்வெடுங்கள் என்று தெரிவித்ததாக கூறியிருக்கிறார். அதோடு அப்போது தோனி கேப்டன் கூட இல்லை ஆனாலும் எனக்காக தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் எனக்கு ஆலோசனை வழங்கினார் என்று சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கின்றார்.
அப்போது தான் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுமார் ஒன்றரை வருடங்கள் விளையாடாமல் இருந்ததாகவும் ஆனால் தோனி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் தன்னுடன் தொடர்பு கொண்டு தன்னுடைய உடல்நிலை தொடர்பாக விசாரணை செய்வார் என்றும் மருத்துவர்கள் என்ன தெரிவித்தார்கள் என்று கேட்டு தெரிந்து கொள்வார் என்றும் சுரேஷ்ரெய்னா தெரிவித்திருக்கிறார். அவர் ஒரு வீரராகவும் மற்றும் தனக்கு ஒரு சகோதரர் ஆகவும் தன்னுடைய உடல் நிலை தொடர்பாக தெரிந்துகொள்ள விரும்பியவர் தோனி என்றும் தெரிவித்திருக்கிறார். அதோடு அவருடைய அக்கறை தான் தனக்கு மிகவும் தூண்டுகோலாக இருந்தது என்றும் சுரேஷ்ரெய்னா குறிப்பிட்டிருக்கின்றார். அதோடு அதன்பிறகு விரைவாக குணம் பெற்று இந்திய அணிக்காக தான் விளையாடினேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.