சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்!

0
288

சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்!

சூர்யா 42 படத்தின் மூலம் நீண்ட இடைவெளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் சூர்யா 42 படத்தில் திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்க, வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்ற, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வரலாற்றுப் படமாக இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் முழுக்க முழுக்க வரலாற்றுக் கதைக்களம் இல்லை என்றும் ஒரு பிளாஷ்பேக் காட்சி மட்டுமே வரலாற்றுக் கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “இந்த படம் ஒரு பேன் இந்தியா படமாக 10 மொழிகளில் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சென்னையிலும், கோவாவிலும் சில நாட்கள் நடந்தது. இந்நிலையில் தீபாவளி முடிந்ததும், அடுத்த கட்ட ஷூட்டிங் மீண்டும் கோவாவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் பிரபல இசையமைப்பாளராக இருந்த தேவி ஸ்ரீ பிரசாத் சில ஆண்டுகளாக தமிழில் பெரிதாக படங்களுக்கு இசையமைக்கவில்லை. இந்த படத்தின் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்துள்ள அவர் இந்த படத்தின் பாடல்கள் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் படத்துக்கான பாடல்கள் சில உருவாக்கப்பட்டு விட்டதாகவும் அதில் ஒரு பாடல் சமீபத்தில் கோவாவில் படமாக்கப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த பாடலில் சூர்யா மற்றும் திஷா பட்டானி ஆகியோர் நடனமாடி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous articleஇனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்?
Next article26-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here