வணங்கான் படத்துக்கு வந்த புது சிக்கல்… ஏற்கனவே அதே தலைப்பில் உருவாகும் படம்?

0
286

வணங்கான் படத்துக்கு வந்த புது சிக்கல்… ஏற்கனவே அதே தலைப்பில் உருவாகும் படம்?

சூர்யா பாலா கூட்டணியில் மூன்றாவது படமாக வணங்கான் திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது.

நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து இப்போது மற்றொரு முக்கியமான தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி வணங்கான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில் இந்த படத்துக்கு வைக்கப்பட்டுள்ள ‘வணங்கான்’ என்ற தலைப்பு ஏற்கனவே ஒரு படத்துக்கு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிலம்பாட்டம் மற்றும் சிப்பாய் ஆகிய படங்களின் இயக்குனர் சரவணன் இதே தலைப்பில் ஒரு படத்தின் ஷூட்டிங்கை பாதிவரை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது இந்த தலைப்புக்கு இப்போது சிக்கல் உருவாகியுள்ளது. இது சம்மந்தமான பஞ்சாயத்து தற்போது நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Previous articleநாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
Next articleடி 20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்… கோஹ்லியின்  சாதனையை முறியடித்த வீரர்!