சூர்யா தேவிக்கு நான் உதவப் போகிறேன் என்று திடீரென்று பல்டி அடித்த நடிகை வனிதா!!

Photo of author

By Parthipan K

சில நாட்களாகவே நடிகை வனிதாவின் பிரச்சினை பெரிதும் பேசப்பட்டு வருகிறது.  இதில் சூர்யா தேவி வனிதாவை வீடியோ மூலம் பெரிதும் விமர்சித்ததால் அவர்மீது போரூர் காவல் நிலையத்தில் வனிதா புகார் தெரிவித்தார்.

இந்த நிலையில் சூரிய தேவியை விசாரணை செய்த போலிசாருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக சூர்யா தேவிக்கும் அவரை விசாரணை செய்த பெண் காவலாளிக்கும் கொரோனா உறுதி  செய்யப்பட்டது.

அதன் பின் சூரிய தேவி தனிமைப் படுத்தப் படாமல் தலைமறைவாகியுள்ளார். இந்த சூழலில் தான் சூர்யா தேவிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஒருவர் வனிதாவுக்கு ட்விட் செய்துள்ளார்.

அதில் அவர் “ சூர்யா  தேவியின் வீடியோவால் உங்களுக்கு மனக்கவலை ஏற்பட்டிருப்பது எனக்கு தெரியும். ஆனால் இப்பொழுது  உங்களின் F.I.R ஆல் அவர் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் தலைமறைவாகி இருப்பது நல்லதன்று அவருக்கு இப்போது சிகிச்சை தேவை” என்று வனிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு மனமிரங்கிய வனிதா “ நான்  சூர்யா தேவிக்கு எதிரான புகாரை வாபஸ்  வாங்க அதிகாரியிடம் பேசியுள்ளேன். நானும் மனுசி தான்! சூர்யா தேவி காப்பாற்றப்பட வேண்டும். அவர்கள் பிள்ளைகளும் பாதுகாக்கப்பட வேண்டும், சூர்யா தேவிக்கு வேண்டிய உதவிகளை கண்டிப்பாக நான் செய்வேன்” என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.