விருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி

0
306

விருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான கதையை எடுத்து வைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் படத்துக்கு  முதல்நாளில் நல்ல கூட்டம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல பிரபலங்களும் படத்தைப் பார்த்து பாராட்டி வந்தாலும், ரசிகர்களை பெரிய அளவில் படம் கவரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் நாளில் விருமன் திரைப்படம் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனம் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த வசூல் மிகவும் மோசமில்லை என்று சொல்லப்படுகிறது. அதையடுத்து இரண்டாவது நாளில் முதல்நாளை விட வசூல் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு நல்ல வசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்  விருமன் ரிலீஸானதை அடுத்து நடிகர் சூர்யா நடிகர் சங்கத்தின் கட்டிடத்துக்காக ரூ 25 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளார். விருமன் படக்குழுவினரோடு இணைந்து இந்த பணத்தை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Previous articleகேப்டனாகும் முழு தகுதியும் அவருக்கு இருக்கு… பந்துவீச்சாளர் குறித்து முன்னாள் வீரரின் கருத்து
Next articleவீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here