தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா!… 4 விருதுகளைக் கைப்பற்றிய ‘சூரரைப் போற்று’

0
211

சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா வென்றுள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று கொரோனா தொற்று காரணமாக நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைம்ல் வெளிவந்தது. சுதா கொங்கரா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

‘வானமே எல்லை’ என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. படத்தில் நெடுமாறன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். பாராட்டுகளையும் விமர்சனங்களையும் குவித்த இந்த திரைப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மைல்கல் படமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்துக்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்துக்காக சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷும், சிறந்த படமாக ‘சூரரைப் போற்று திரைப்படமும்’ தேர்வாகியுள்ளன.

Previous articleசிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!
Next articleதனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது ‘நானே வருவேன்’ ஸ்பெஷல் அப்டேட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here