இந்த பிக்பாஸ் பிரபலம்தான் சூர்யா- சிவா படத்தின் நாயகியா? வெளியான தகவல்!

Photo of author

By Vinoth

இந்த பிக்பாஸ் பிரபலம்தான் சூர்யா- சிவா படத்தின் நாயகியா? வெளியான தகவல்!

Vinoth

இந்த பிக்பாஸ் பிரபலம்தான் சூர்யா- சிவா படத்தின் நாயகியா? வெளியான தகவல்!

சிறுத்தைப் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார்.

சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யா சிவா படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான மஹிரா ஷர்மா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.