வணங்கான் படத்தை டீலில் விட்டு சிறுத்தை சிவா படத்துக்கு செல்லும் சூர்யா… ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்

0
202

வணங்கான் படத்தை டீலில் விட்டு சிறுத்தை சிவா படத்துக்கு செல்லும் சூர்யா… ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்

சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.

சிறுத்தை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார். சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் கணிசமான பகுதி படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதற்கிடையில் இந்த படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டு படங்களிலும் மாறி மாறி சூர்யா நடிப்பார் என சொல்லப்படுகிறது.

Previous articleதுப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. 
Next articleபிஞ்சு உயிரை காவு வாங்கிய தாய்! அதிர்ந்து போன ஊர்மக்கள்!