10 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸ்… சூர்யா- சிறுத்தை சிவா படம் பற்றி தயாரிப்பாளர்

0
155

10 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸ்… சூர்யா- சிறுத்தை சிவா படம் பற்றி தயாரிப்பாளர்

சூர்யா நடிப்பில் அடுத்த படமாக சிறுத்தை சிவா இயக்கும் படம் சமீபத்தில் பூஜையோடு தொடங்கியது.

இயக்குனர் சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார். சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த படத்தில் திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்க, வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்ற, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வரலாற்றுப் படமாக இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “இந்த படம் ஒரு பேன் இந்தியா படமாக 10 மொழிகளில் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார்.

சிறுத்தை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். ஆனால் அவர்கள் கூட்டணியில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும் மோசமான விமர்சனங்களையும் பெற்றது.

Previous articleசுப்மன் கில் அதிரடி சதம்… மற்ற வீரர்கள் ஏமாற்றம்… ஜிம்பாப்வேக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு
Next articleஇனி பிரபஞ்ச அழகி போட்டியில் இவர்களும் பங்கேற்க அனுமதி