5 கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பில் ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா!

5 கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பில் ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தோனி திஅன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த திஷா பதானி அவர்கள் நடித்துள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகராக யோகி பாபு மற்றும் பல ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர்

இந்த கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பை கோவா,கேரளா, கொடைக்கானல்,போன்ற பகுதிகளில் மிக வேகமாக எடுத்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யா,வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் இணையுள்ளதாக முன்பே தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து சூர்யா, இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் கர்ணா என்னும் மகாபாரத கதையை மையப்படுத்தி எடுக்கப் போகும் படத்தில் ஒப்பந்தம் ஆகிவுள்ளார் எனும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கர்ணா திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரமாக நடிக்க உள்ளதாக சமூக வட்டாரங்களில் பலர் கூறி வருகின்றனர்.