மீண்டும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை குறைப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

0
33
#image_title

மீண்டும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை குறைப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையை சென்ற மாதம் 200 ரூபாய் குறைத்த மத்திய அரசு மீண்டும் கேஸ் சிலிண்டருக்கான விலையை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.

சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் 1150 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு கடந்த மாதம் சிலிண்டருக்காக விலையில் 200 ரூபாயை குறைத்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெண்களின் மனதில் பெரும்.

இதையடுத்து பிரதர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று(அக்டோபய் 4) மந்திரி சபை கூட்டம் நடைபெற்று. இந்த கூட்டத்தில் பல முக்கியமான திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டு இந்த முடிவை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உஜ்வாலா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த உஜ்வாலா திட்டம் மூலமாக 9.6 கோடி பெண்கள் இலவசமாக கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. தற்பொழுது உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் விலைக் குறைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி 14.2 அளவு கொண்ட இந்த சிலிண்டர் 903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு 200 ரூபாய் கடந்த மாதத்தில் குறைக்கப்பட்டு 703 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டு 603 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த மூன்று வருடங்களில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 75 லட்சம் மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.