சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
58

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஒரு பெண் இயக்குனர். திரை உலகில் ஒரு பெண் இயக்குனராக மக்கள் மத்தியில்  நல்ல ஆதரவையும்  பாராட்டுகளையும் பெற்ற இயக்குனர் சுதா கோங்குரா என்பவரே. சூரரைப்போற்று திரைப்படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் இயக்கிய படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சமீபகாலமாக நடிகர் சூர்யாவின் எந்த திரைப்படமும் பெரிய அளவில் வசூலையும் அல்லது மக்கள் மத்தியில் பாராட்டையும் பெறவில்லை என்றாலும் தொடர்ந்து அவர் தனது முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  பெரும்பாலும் அவர் எடுத்துக்கொண்ட சமீபத்திய கதைகள்  அரசியலை  சார்ந்து இருப்பது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இவர் அரசியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது.

ஆறு வருடங்களாக இவரின் திரைப்படங்கள் எதுவும் ஹிட் ஆகவில்லை என்பதால் என்னவோ தெரியவில்லை  கோலிவுட் வட்டாரத்தில் இவரைப்பற்றிய சர்ச்சையான பேச்சுக்கள் தற்போது அதிகம் பரவி வருகின்றது.  இந்த  கொரோனா காலத்தில் இவர் செய்த உதவிகளை மறந்து இவர்கள் புரணி பேசிக்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரை பாகுபலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருந்தனர். ஆனால் இவரோ கால்ஷீட் காரணமாக அப்பட  வாய்ப்பை தவிர்த்துவிட்டார்.  ஒருவேளை அந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருப்பார் என்கிற பேச்சு பரவலாக பரவி வருகிறது. சூரரை போற்று திரைப்படம் நல்ல வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவலை பதிவு செய்திருந்தது. ஆனால் தற்போது இந்த திரைப்படம் அமேசான் வலைதளங்களில் ரிலீசாக உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வெளியானதையடுத்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

author avatar
Parthipan K