பயத்தின் காரணமாக முதியவர் செய்த செயலால் ஏற்பட்ட ஆச்சரியம்!

Photo of author

By Hasini

பயத்தின் காரணமாக முதியவர் செய்த செயலால் ஏற்பட்ட ஆச்சரியம்!

கொரோனா இரண்டாம் அலை மக்களை வாட்டி வதைக்கிறது.நோய் தொற்றின் தாக்கத்தினால் மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்.மாநில அரசுகள் மக்களை காக்கும் வகையில் முழு ஊரடங்குகளை பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பை தொடர்ந்து பல வண்ணங்களில் பூஞ்சை நோய்கள் மக்களை தாக்கி வருகிறது.ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நோய்கள் பரவி வருகிறது.

பொது மக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருக்கனூர் சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரை சேர்ந்த முதியவர் பூங்காவனம் (65 ) வயதுடைய இவர் தலையில் வேப்பிலையுடன் கடைவீதிகளில் சுற்றி வருகிறார்.

அவரிடம் இது பற்றி கேட்கும் பொது கொரோனா பயத்தின் காரணமாக இவ்வாறு சுற்றுவதாக கூறி வருகிறார்.தலையில் வேப்பிலையுடன் சுற்றும் அவரை மக்கள் ஆச்சரியமுடன் பார்க்கின்றனர்.