முதல்வர் கொடுத்த சப்ரைஸ் !! ரேசன்  கடைகளில்  வழங்கப்படும்  தீபாவளி பரிசு பொருட்கள்  என்ன ?.. என்ன?…   

பொதுவாக  தீபாவளி  பண்டிகை  என்றாலே,  அரசு அங்கன் வாடியில்  ரேசன் அட்டை தாரர்களுக்கு   இலவச பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் , இந்த ஆண்டும் பரிசு பொருட்கள் வழங்க  முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இம் மாத  31ம் தேதி தீபாவளி  பண்டிகை  நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

இதன் அடிப்படையில் பொது மக்களுக்கு  இலவச  உணவு பொருட்கள்  ரேசன் கடைகள் மூலமாக  விநியோகம் செய்யப்படயுள்ளதாக  அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது .

மத்திய , மாநில அரசுகள்  அரசு ஊழியர்களுக்கு  தீபாவாளி போனஸ் வழங்கி  வருகிறது.

சில  முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு   தீபாவளி பரிசாக  கார்,  பைக்குகள்  வழங்கி  இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறது.

தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொங்கல் பரிசு தொகுப்பினை  அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில்  வருகின்ற  21 ஆம் தேதி தீபாவளி பரிசாக மக்களுக்கு  2கிலோ  சர்க்கரை மாற்றும்  10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்  என அறிவித்தார்.

மேலும்  மாற்றுத்திறனாளிகளின்   உயர்த்தப்பட  உதவித்தொகை  வருகின்ற நவம்பர் மத தொடக்கத்தில்  வழங்கப்பட்டும் என தெரிவித்தார்.