கொரோனா பொது முடக்கத்தினால் திரையரங்கில் திரையிட தயாராக இருந்த படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வெளியிடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர் படத்தின் தயாரிப்பாளர்கள் .
முதன்முதலாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படமானது OTT தளத்தில் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பெரும் கோபத்தை சம்பாதித்தார் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர்.
இதன் விளைவாக சூர்யாவின் குடும்ப உறுப்பினர்களின் படம் இனிமேல் திரையரங்கில் திரையிடப்பட்ட என்று தியேட்டர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
ஆனால் அதன் பின் பல பிரபலங்களின் படங்கள் OTT தளத்தில் வெளியான நிலையில், தற்போது படங்களை OTT தளத்தில் வெளியாவது சர்வசாதாரணமாகி போச்சு.
இந்த சூழலில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படமானது அமேசானில் ரிலீஸ் ஆன நிலையில், அதன் மூலம் கிடைத்த சுமார் 5 கோடி பணமானது பல சங்கத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் 1.5 கோடி காசோலையை சூர்யாவின் தந்தை பழம்பெரும் நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யாவின் மேனேஜர் ராஜசேகர பாண்டியன் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் சேர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கலைப்புலி தாணுவிடம் வழங்கினர்.இதன் ஒரு பகுதி திரையரங்கு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாவது திரையரங்கு உரிமையாளர்களின் கோபம் கொஞ்சம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.