சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன?

0
244

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன?

நடிகர் சூர்யாவின் திரைப்படங்களை இயக்க அடுத்தடுத்து 3 இயக்குனர்கள் கமிட் ஆகியுள்ள நிலையில் சூர்யாவின் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்த கவுதம் மேனனின் நிலைமை பரிதாபமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாம் வாரம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வெற்றிமாறன் படத்தை முடித்த பின்னர் ஹரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை ஹரி தொடங்கி விட்டார் என்றே கூறப்படுகிறது

இதனை அடுத்து பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதை சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன?

இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி தருவதாக வாக்குக் கொடுத்திருந்த கௌதம்மேனன் நிலைமை பரிதாபமாக இருப்பதாகவும், 2022ஆம் ஆண்டு வரை சூர்யா-கௌதம் மேனன் இணையும் படம் வெளிவர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது

கௌதம் மேனன் தற்போது ’குயின்’ மற்றும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

Previous articleவிண்ணில் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய நிகழ்வு: ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு
Next articleசூடான் தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here