OTT தளத்தில் வெளியாகும்  சூர்யாவின் சூரரைப் போற்று!!! ரிலீஸ் தேதி இதோ!!

Photo of author

By Parthipan K

சூர்யாவின் சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான பெங்களூரைச் சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.

இதில் நடிகர் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

துரோகி’, ‘இறுதிச்சுற்று’ படங்களை இயக்கிய சுதா கொங்கரா இதை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். 

தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பல வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்துஇப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படத்திற்காக தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்து பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

அதனால்தான் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா விமானத்திலேயே நிகழ்ந்தது. மேலும்  இப்படக்குழு விமானத்தையே பார்த்திராத ஏழை மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்றார்கள்.

இந்தப் படத்தை ஏப்ரல் இறுதி அல்லது மே 1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனாபாதிப்பால் மொத்த பிளானும் சிதைக்கப்பட்டு தற்போது ஒடிடி-யில் வெளியாக போவதாக திடீரென்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது

‘சூரரைப் போற்று’  படமானது அமேசான் பிரைம் நிறுவனம் அக்டோபர் 30-ம் தேதி படத்தை வெளியிடுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஒடிடி-யில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் படம் சூரரைப் போற்று படம் என்பது குறிப்பிடத்தக்கது.