ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை: புதிய தகவல்

Photo of author

By CineDesk

சூர்யாவை திருமணம் செய்த பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் நடிகை ஜோதிகா ரீ என்ட்ரி ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜோதிகா தொடர்ந்து ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்

அந்த வகையில் ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வா செல்வமே’ என்ற பாடல் இன்று சிங்கிள் பாடலாக மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமார் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவின் படத்தில் பிருந்தா சிவக்குமார் பாடகியாக அறிமுகமாகிறார் என்பதும் இந்த பாடல் தான் அவர் பாடிய முதல் திரைப்பட பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியவர்களை அடுத்து தற்போது சூர்யா குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு பிருந்தா சிவக்குமார் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது