அஞ்சான்’ படத்திற்கு பின் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூர்யா!

0
214

அஞ்சான்’ படத்திற்கு பின் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூர்யா!

சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தபோதிலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்த படத்தில் சூர்யா ஒரு பாடலை பாடியிருந்தார் என்பதும் ‘ஏக் தோ தீன்’ என்ற அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர்ஹிட் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அஞ்சான் படத்திற்கு பின் தற்போது மீண்டும் சூர்யா ரிஸ்க் எடுத்து சூரரை போற்று’ என்ற படத்திற்காக ஒரு ராப் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் ஹைபிட்சில் மிக வேகமாக இருந்தாலும் சூர்யா அதை ஒரே டேக்கில் பாடி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை அசத்திவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பாடல் ஹிட்டாகும் பட்சத்தில் இனி அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை சூர்யாவின் குரலில் எதிர்பார்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

சுதாகொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Previous articleசேலத்துக்கு சிங்கம் வீரபாண்டியாரின் சிதைக்கப்பட்ட வரலாறு! திமுகவின் துரோகத்தை தோலுரிக்கும் மருத்துவர் ராமதாஸ்
Next articleரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்