சூர்யா,விக்ரம்,சிவகார்த்திகேயன் படங்கள் நிறுத்தம்! அதற்கு என்ன காரணம் தெரியுமா?

0
130
Surya, Vikram, Sivakarthikeyan films stopped! Do you know the reason for that?
Surya, Vikram, Sivakarthikeyan films stopped! Do you know the reason for that?

சூர்யா,விக்ரம்,சிவகார்த்திகேயன் படங்கள் நிறுத்தம்! அதற்கு என்ன காரணம் தெரியுமா?

கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருவதால் மக்கள் அதிகப்படியானோர் பாதித்து வருகின்றனர்.மக்கள் அனைவரும் சமூக இடைவெளிகளை கடைபிடித்தும்,முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் எனவும் அனைவரும் முன்னெச்செரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்தும் அபராதமும் வாங்கி வருகிறது.

தற்போது மன்னார்குடியில் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு இலவசமாக பயணச்சீட்டு வழங்கி தன்னார்வலர்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.இது அம்மக்களிடையே பெரும் வரவேற்ப்பை அளித்துள்ளது.சட்டமன்ற தேர்தலானது 5 மாநிலங்களும் ஏப்ரல் 6 –ம் தேதி நடந்து முடிந்தது.அத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது அதிக அளவு மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால்,கொரோனா தொற்று அதிகரித்தது என உயர்நீதிமன்றம் கூறியது.அதனால் தேர்தல் முடிவின் வாக்கு எண்ணிக்கையின் போது விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் தேர்தல் வாக்கு எண்ணும் தேதி தள்ளி வைக்கப்படும் என உயர்நீதி மன்றம் எச்சரித்தது.

அந்துமட்டுமின்றி தேர்தலின் முந்தைய நாள் முதல் இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது.அதனால் தமிழக அரசு அதன் முடிவுகளை இன்று உயர்நீதி மன்றத்திற்கு தெரிவித்தது,முன்பை போல இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.அதுமட்டுமின்று ஞாயிற்றுகிழமைகளில் மட்டுமே முழு ஊரடங்கும்,தீம் பார்க்குகள் 50%  மக்களுடன் அனுமதிக்கலாம் என கூறினர்.

அதற்கடுத்து சினிமா படபிடிப்பு 50%  நபர்களைக் கொண்டு பட பிடிப்பு நடத்தாலாம் என்றும் தெரிவித்தது.ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தற்போது சூர்யாவின் 40,விக்ரமின் 60,சிவகார்த்திகேயனின் டான் போன்ற திரைப்பட படபிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் பெருமளவு சோகத்தில் உள்ளனர்.அதே போலா ஆர்,ஆர்,ஆர் என ராஜமௌலி எடுக்கம் படத்தையும் நிறுத்தி வைத்துள்ளனர்,அதிக அளவு பணியாளர்களைக் கொண்டு படம் எடுக்க முடியாத காரணத்தினால் இப்படபிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.